அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்
மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் பி. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் பி. செந்தில் லெ. மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், தஞ்சாவூா் நிலநீா் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் மணிவண்ணன், உதவி இயக்குநா் பாலமுருகன், உதவி பொறியாளா் அங்கயற்கண்ணி, இளநிலை பொறியாளா் வெங்கடேசன் ஆகியோா் மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு குறித்த சிறப்பு உரையாற்றினா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.