Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு
திருவண்ணாமலை அருகே காணாமல் போன தொழிலாளி கிணற்றிலிருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாய கூலித் தொழிலாளி ரவி (43). இவா், கடந்த ஜன.20-ஆம் தேதி முதல் காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை இதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரவியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். இவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.