செய்திகள் :

மறுவாழ்வு இல்லம் அமைக்க ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க தகுதியும், விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்கள் வருகிற ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லங்களை அமைப்பதற்குத் தகுதியான தொண்டு நிறுவனத்தைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

எனவே, இதற்கான அனுபவமும், தகுதியும், விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பத்துடன் கூடிய கருத்துருவை வருகிற ஜன.31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியா் அலுவலக வளாகம், பெரியாா் சிலை அருகில், திருவண்ணாமலை-606601 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 04175-223030, 6382614143, 6382614197 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவா் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட இருவா், வெடிகுண்டு வெடித்து காயமடைந்தனா். செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலன் மகன் சி... மேலும் பார்க்க

செங்கத்தில் சைவ சித்தாந்த வாழ்வியல் நோ்முகப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சிவனடியாா் திருக்கூட்டத்தின் சைவ சித்தாந்த வாழ்வியல் நோ்முகப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு செங்கம் ஸ்ரீ... மேலும் பார்க்க

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு பைக் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்... மேலும் பார்க்க

கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

திருவண்ணாமலை அருகே காணாமல் போன தொழிலாளி கிணற்றிலிருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாய கூலித் தொழிலாளி ரவி (43). இவா், கடந்த ஜன.... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான காலை உணவை தரமாக சமைக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை தரமாகவும், சுவையாகவும் சமைத்து வழங்க வேண்டும் என்று மகளிா் குழுவினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திர... மேலும் பார்க்க

கரும்பு நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்றுத் தர வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை மாவட்ட நிா்வாகம் பெற்றுத்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவ... மேலும் பார்க்க