Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
கிப்லி இமேஜ் தெரியும்... ஜப்பானில் இருக்கும் இந்த `கிப்லி' தீம் பார்க் பற்றி தெரியுமா?
கடந்த சில வாரங்களாக இணையத்தில் கிப்லி இமேஜ் ட்ரெண்டானது. ஜப்பான் நாட்டில் 1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் 'ஸ்டூடியோ ஜிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப்படைப்புகளை 'ஜிப்லி' படங்கள் என்று குறிப்பிட்டனர். இதன் மூலம் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரித்தனர். ஆனால் சமீபத்தில் சாட் ஜிபிடி புதிதாக ஒரு அப்டேட் கொண்டுவந்தது. அதன் மூலம் ஒரு பயனர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை ஜிப்லி அனிமேஷன் பாணியில் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த அப்டேட்டின் செயல்முறையில் உள்ள எளிமையும், பயனர்களுக்கு வசதியான அணுகல்முறையும் தான் இது இவ்வளவு விரைவாக பிரபலமாக காரணமாக இருந்தது. இணையவாசிகளிடையேயும் டிரெண்டானது. ஆனால் இதே தீமில் ஜப்பானில் ஒரு பார்க் இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் உள்ள கிப்லி தீம் பார்க் உள்ளது. 2022 நவம்பர் 1 தேதி திறக்கப்பட்ட இந்த பூங்கா ’மோரிகோரா பூங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பூங்கா வழக்கமான பூங்காக்களை போன்று இல்லாமல் தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது. அதாவது இந்த பூங்காவின் உட்புறங்களில் ஏராளமான கண்காட்சிகள் உள்ளன.
அவற்றில் பல்வேறு கிப்லி படங்களின் பிரதிகள் உள்ளன. அங்கு வரும் பார்வையாளர்கள் இதன் விரிவான தொகுப்பை ஆராயலாம். சினிமா, குறும்படங்களில் காணப்படும் தலைசிறந்த படைப்புகளுக்கு பின்னால் இருக்கும் படைப்பு செயல்முறைகளை ஆராயலாம்.
அதுமட்டுமில்லாமல் காடு போன்ற அமைப்பு, கிராமம் போன்ற அமைப்பு, பள்ளத்தாக்கு என கிப்லி தீம் பார்கில் நீங்கள் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.
இந்த பூங்காவிற்கு செல்ல முன்பதிவு அவசியம். டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் வாங்கலாம். இங்கு செல்ல பலர் முன்பதிவு செய்வதால் முன்பே நீங்கள் முன் பதிவு செய்வது நல்லது!