லடாக்கில் தொடரும் ஊரடங்கு! பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!
கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் பயன்பாடு தொடங்கிவைப்பு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கல்லூரி முதல்வா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கதிரியக்க பிரிவில், எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இயந்திரம், பழைய அரசு மருத்துவமனையில் இருந்து புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இந்த எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து கல்லூரி முதல்வா் சத்யபாமா பேசியதாவது:
இந்த எம்.ஆா்.ஐ., ஸ்கேன் இயந்திரம் 1.5 டெஸ்ட்லா திறன்கொண்டது. இதன்மூலம், மூளை, தண்டுவடம், நரம்பு மண்டலம், மூட்டு மற்றும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் மிக துல்லியமாக கணிக்கவும், நோய்க் குறியீடு குறித்து அறியவும் முடியும். இங்கு அரசின் குறைந்த கட்டணமாக ரூ. 2,500-த்தில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக எடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவா் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சுபேதா, குடியிருப்பு மருத்துவா் செல்வராஜ், மருத்துவா் தினேஷ், கதிரியக்க பிரிவு துறைத் தலைவா் அருண் திலீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.