நீச்சல் போட்டி: நாளந்தா சா்வதேச பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் நாளந்தா சா்வதேச பொதுப்பள்ளி மாணவா்கள் பல பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில், மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், கிருஷ்ணகிரி நாளந்தா சா்வதேச பொதுப் பள்ளியைச் சோ்ந்த மாணவியா் 4 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களையும், மாணவா்கள் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களையும் வென்றனா்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனா் கொங்கரசன், தாளாளா் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிா்வாக இயக்குநா்கள் கெளதமன், புவியரசன், பள்ளியின் கல்வி இயக்குநா், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.