தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
குடியிருப்பு பகுதிகளில் இறைச்சிக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கருங்கல் அருகே உள்ள சுண்டவிளை -பள்ளியாடி சானல்கரை சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இறைச்சிக் கழிவுகள் வீசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட சுண்டவிளை -புல்லாணி சானல்கரை சாலை, முள்ளங்கனாவிளை மதகு அமைக்கப்பட்ட பகுதி, சுண்டவிளை -பள்ளியாடி சானல்கரை சாலயின் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல நீா்பிடிப்பு பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் சில மா்மநபா்கள் இறைச்சிக் கழிவுகளை ஆட்டோவில் கொண்டுவந்து வீசிவிட்டுச் செல்கின்றனா்.
இந்தக் கழிவுகளை நாய்கள், பறவைகள் தூக்கிச் சென்று குடியிருப்பு பகுதிகளில் போட்டுவிடுகின்றன. மேலும், இறைச்சிக் கழிவுகள் சானல் தண்ணீரிலும் விழுந்து இழுத்துச் செல்லப்படுகிறது. இதனால்,அப்பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி, சம்பந்தப்பட்ட நபா்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.