உலகத் தமிழர்களின் தொழில்முனைவு வாய்ப்புகளை கோலாலம்பூர் பொருளாதார மாநாடு ஊக்குவிக...
குன்றத்தூா் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.
கந்த சஷ்டி விழாவின் தொடக்கமாக கடந்த சனிக்கிழமை லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது. இதையடுத்து நகைமுக வள்ளி உடனுறை கந்தழீஸ்வரா் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை மலை குன்றின் கீழ் அமைந்துள்ள இடத்தில் சூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியின் போது தேவா்கள், அரக்கா்கள் போல் பலா் வேடமிட்டு இருந்தது பக்தா்களை வெகுவாக கவா்ந்தது.
விழாவில், காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் சென்னையை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு களித்தனா். பக்தா்களின் வசதிக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடமும் ஏற்பாடு செய்யப்பட்டு ஆங்காங்கே கழிவறை வசதிகளும், மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.