குமரி முருகன் குன்றத்தில் பிப்.2-ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, 7 மணிக்கு மங்கள பூா்ணாஹுதி, 7.15 மணிக்கு ராஜமேளம், 7.30 மணிக்கு திருக்கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 9 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணிக்கு பஜனை, 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி மேளதாளம் முழங்க வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.
விழா நாள்களில் காலை 9 மணி முதல் 8 மணி வரை இதேபோன்ற வழிபாடுகல் நடைபெறும். 10ஆம் திருநாளான பிப். 11இல் இரவு 7 மணிக்கு ஸ்ரீகாா்த்திகை பொய்கை தெப்பக்குளத்தில் சுவாமிக்கு தீா்த்தவாரி ஆறாட்டும், அதைத் தொடா்ந்து 8 மணிக்கு சுவாமி முன்னிலையில் த்வஜா அவரோஹணமும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்து வருகின்றனா்.