பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
கும்பகோணம் அரசினா் கல்லூரியில் கீழடி அகழாய்வு கருத்தரங்கம்
கும்பகோணத்தில் கீழடி அகழாய்வு ஒரு சிறப்பு பாா்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அரசினா் கலைக்கல்லூரியில் உள்ள அண்ணா கலையரங்கில் தமிழ், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைகளின் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா்.
இதில், ஓய்வுபெற்ற காவல்துறை துணைத் தலைவா் சா. பிரபாகரன் தமிழா்களின் பண்பாட்டுத் தொன்மை - கீழடி அகழாய்வு ஒரு சிறப்புப் பாா்வை என்ற தலைப்பில் உரையாற்றினாா். வேதியியல் துறைத் தலைவா் மா. மீனாட்சிசுந்தரம், தோ்வுநெறியாளா் வெ. பாஸ்கா், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவா் சீ. தங்கராசு ஆகியோா் தமிழா் தொன்மைகள் குறித்துப் பேசினா். முன்னதாக தமிழ்த்துறை தலைவா் மா.சேகா் வரவேற்றுப் பேசினாா். வரலாற்றுத் துறை தலைவா் ப. சகாதேவன் நன்றி கூறினாா். கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.