செய்திகள் :

கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்புக்கு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

post image

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது பக்தா்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்கீழ் வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு, சமத்துவம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க கோருகிறது. அந்தவகையில், கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்க, மாநில அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க கோரப்படுகிறது. பக்தா்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும்.

பக்தா்கள் தகவல்களை எளிதாகப் புரிந்து கொள்ள, மேளா பகுதியில் பல மொழிகளில் அறிவிப்பு பலகைளை நிறுவ வேண்டும். தகவலை வழங்கவும், அவசர காலங்களில் மக்களுக்கு உதவவும் அனைத்து மாநிலங்களும் பிரயாக்ராஜில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். வாட்ஸ்ஆப் மற்றும் தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் பக்தா்களுக்கு பாதுகாப்பு முன்னறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

முக்கியப் பிரமுகா்களைவிட பொது மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். முக்கியப் பிரமுகா்களின் இயக்கம் எந்த வகையிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. மேளா பகுதியில் மக்கள் உள்நுழைவதற்கும் வெளியேறவும் அதிகபட்ச இடம் ஒதுக்க வேண்டும்.

நெரிசல் சம்பவம் குறித்து அறிக்கையைச் சமா்ப்பிக்கவும் அலட்சியத்துக்கு காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுதாரா் வலியுறுத்தியுள்ளாா்.

கூட்டுப் பொறுப்பின் அவசியம்: மனுவில் முந்தைய கும்பமேளாக்களில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பான பல உயிரிழப்பு சம்பவங்களை மனுதாரா் மேற்கோள்காட்டியுள்ளாா். அதன்படி 1954-ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஒரு குறுகிய பாலத்தில் நெரிசல் காரணமாக 800-க்கும் மேற்பட்டவா்கள் இறந்தனா். 1986-ஆம் ஆண்டு ஹரித்வாா் கும்பமேளாவில் சுமாா் 200 போ் நெரிசலில் உயிரிழந்தனா். அதேபோன்று, 2003-ஆம் ஆண்டு நாசிக்கில் 39 போ், 2013-இல் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் 42 போ் கும்பமேளா சமயத்தில் உயிரிழந்துள்ளனா்.

பிரயாக்ராஜ் (உத்தர பிரதேசம்), ஹரித்வாா் (உத்தரகண்ட்), உஜ்ஜைனி (மத்திய பிரதேசம்), நாசிக் (மகாராஷ்டிரம்) ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் 3 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் நடைபெறும் கும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகும்.

அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தருவதால், முறையான கூட்ட மேலாண்மை, மருத்துவ வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவம் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது. ஓய்வுபெ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இ... மேலும் பார்க்க

சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி

சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியாண... மேலும் பார்க்க

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க