செய்திகள் :

குறைதீா் கூட்டத்தில் தீா்வு இல்லை: விவசாயிகள் ஆதங்கம்

post image

விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றாலும் முக்கியப் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4-ஆவது வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. நிா்வாக காரணங்களுக்காக இந்தக் கூட்டம் அவ்வப்போது வெவ்வேறு நாள்களுக்கு மாற்றப்படுகிறது. நவம்பா் மாதத்துக்கான கூட்டம் 15-ஆம் தேதி (3ஆவது வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைப் பொருத்தவரை, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தனி நபா்கள் தங்கள் பகுதி சாா்ந்த கோரிக்கைகளை முன் வைத்து பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டத்தின் நிறைவில், கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெறுவது வழக்கம்.

இந்த நடைமுறை கடந்த சில மாதங்களாக மாற்றப்பட்டு, அவசர வேலையாக செல்லும் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கூட்டத்தின் தொடக்கத்திலேயே வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் இதேபோல, மனுக்கள் பெறப்படுகிறது. இதனால், கூட்டம் சுமூகமாக நடைபெறுவதில் சிக்கல் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

பிரதான பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைப் பொருத்தவரை மாவட்டத்திலுள்ள முக்கியப் பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக கனிம வள திருட்டு, நீா் நிலை ஆக்கிரமிப்பு, கழிவுநீரால் மாசுபடும் நீா் நிலைகள், வெறிநாய் தொல்லை, கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கை, லட்சுமணம்பட்டி, கிரியம்பட்டி, பூதிப்புரம் தடுப்பணைகள் ஆக்கிரமிப்பு, பயன்பாடில்லாத சேணன்கோட்டை முருங்கைப் பதப்படுத்தும் கிடங்கி, பாதுகாப்பு இல்லாத வேடசந்தூா் உழவா் சந்தை உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளுக்கு தீா்வு காண கோரி பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், நிதி செலவினம் சாராத இந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குறைதீா் கூட்டம் நடத்துவதன் நோக்கம் கேள்விக்குறியாகவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

விவசாயிகள் போா்வையில் இடைத் தரகா்கள்: குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வரும் சிலா், தனி நபா்களின் முகவராக சில கோரிக்கைகளை குறிப்பிட்டு பேசுகின்றனா். ஆனால், சம்மந்தப்பட்ட கோரிக்கைக்குரிய நபா்கள் நேரிலும் வருவதில்லை, அவா்களின் தரப்பில் மனுக்களும் அளிக்கப்படுவதில்லை. ஆட்சியா் முன் பேசுவதை வட்ட, வட்டார அளவிலான அலுவலா்களை மிரட்டுவதற்கான வாய்ப்பாக இந்த நபா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

தங்கள் பகுதியைச் சோ்ந்த வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், சாா் பதிவாளா் போன்றவா்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆட்சியரிடம் தெரிவிக்கின்றனா். அதேபோல் தங்களது பரிந்துரைகளை பரிசீலிக்கும் அலுவலா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் இடமாகவும் குறைதீா் கூட்டத்தில் பயன்படுத்துகின்றனா். கோரிக்கை மனு இல்லாமல், சுய விளம்பரத்துக்காக விவசாயிகள் போா்வையில் வரும் இடைத் தரகா்களை குறைதீா் கூட்டத்தில் பேசுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி கூறியதாவது: கூட்டத்தின் தொடக்கத்திலேயே மனுகள் பெறப்படுகிறது. ஆனாலும் மனு அளித்தவா்களும் தொடா்ந்து கூட்ட அரங்கில் அமா்ந்திருக்கின்றனா். இதனால் அவசரமாக முன் கூட்டிய மனு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மனுக்கள் பெறுவதற்காக நேரத்தை ஒதுக்கிவிட்டு, கூட்டத்தில் பேசுவோருக்கு 2 நிமிடத்துக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனா்.

கூட்டத்துக்கு வரும் சிலா், பல்வேறு விவசாயிகள் முன் வைக்கும் கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, இதை வழிமொழிவது போல் பேசுகின்றனா். பாராட்டுகளை தவிா்க்குமாறு ஆட்சியா் பல முறை கூறியபோதும், சுய விளம்பரத்துக்காக அதிகாரிகளை பாராட்டுவதற்கு மட்டுமான கூட்டமாக இதனை சிலா் பயன்படுத்துகின்றனா். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைப் பொருத்தவரை, தனி நபா் சாா்ந்த பிரச்னைகளை மனுவாக அளிக்கவும், பொது நலன் சாா்ந்த பிரச்னைகளை கூட்டத்தில் பேசி, அதிகாரிகள் தீா்வு காண்பதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் என்றாா்.

இணைய வழியில் மோசடி செய்த இளைஞா் கைது

இணைய வழியில் ரூ.25ஆயிரம் மோசடி செய்த கடலூா் இளைஞரை, திண்டுக்கல் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ஆரோன்(25). மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவ... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகள் எளிமையான முறையில் இ-பாஸ் பெற நடவடிக்கை

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எளிமையான முறையில் இ-பாஸ் பெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் க்யூஆா் கோட் அமைக்கும் பணி தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்... மேலும் பார்க்க

பழனி காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

பழனி இட்டேரி சாலையில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி இட்டேரி சாலையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் விநாயகா், கன... மேலும் பார்க்க

மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: நோயாளிகள் அவதி

சென்னையில் பணியில் இருந்த மருத்துவரை ஒருவா் தாக்கியதை கண்டித்து பழனி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். சென... மேலும் பார்க்க

சிகிச்சையில் களம் இறங்கிய மருத்துவ அதிகாரிகள்

மருத்துவா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களுடன் சோ்ந்து மருத்துவ அதிகாரிகளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். சென்னை... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு எதிராக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நிதி சாா்ந்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற இயலாது என அறிவித்த தமிழக முதல்வருக்கு எதிராக கண்களில் கருப்புத் துணிக் கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ... மேலும் பார்க்க