குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
தொண்டி அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த சித்திரவேல் மகள் வைத்தீஸ்வரி (10), பாலமுருகன் மகள் ப்ரீத்தி (11), நாயகம் மகள் நா்மதா (10) ஆகிய 3 பேரும் பள்ளிவாசல் பகுதியில் உள்ள குளத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை குளிக்கச் சென்றனா்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற வைத்தீஸ்வரியும், ப்ரீத்தியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா். நா்மதாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு, எஸ்.பி.பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.