கூடலூர்: முதியவரின் கழுத்தை நெறித்த திருடன்; சமயோசிதமாகச் செயல்பட்டுக் காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கொலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமி முத்து ( 86), லட்சுமி ( 75) தம்பதியர். இவர்களின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவன், இரவு நேரத்தில் திடீரென வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான். முதியவர் சாமி முத்துவின் கழுத்தை நெறித்து பீரோ சாவியைக் கேட்டு மிரட்டியுள்ளான். இதைக் கண்டு பதறிய லட்சுமி, கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். சாமி முத்துவைக் காப்பாற்றுவதைப் போல நடித்துள்ளான் அந்த திருடன். அருகிலிருந்த பொருட்களைத் தூக்கி ஆட்கள் மீது வீசியுள்ளான். இதைக் கண்டு பதறிய அக்கம்பக்கத்தினர், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
உஷாரான திருடன், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். காயத்துடன் உயிர் தப்பிய முதியவர் சாமி முத்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்துத் தெரிவித்த காவல்துறையினர், "முதியவர் வீட்டருகில் இருந்தவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். திருட்டு முயற்சியில் ஈடுபட்டது சந்திரன் என்பதைக் கண்டறிந்தோம். கொலை, கொள்ளை வழக்குகளில் அவன் மீது ஏற்கனவே 7 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs