என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்க...
கேரள பேருந்து-இரு சக்கர வாகனம் மோதல்: காவலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே இரு சக்கர வாகனம் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள மணக்கரையை சோ்ந்தவா் சசி (69). வெளிநாட்டில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவா், கடந்த 10 வருடங்களாக புலியூா்குறிச்சி தனியாா் ரப்பா் தொழிற்சாலையில் காவலராக பணியாற்றி வந்தாா்.
செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு வந்தவா், புதன்கிழமை காலை பணி முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வில்லுக்குறி நோக்கி சென்றாா்.
அப்போது, அதே திசையில் நாகா்கோவில் நோக்கி வந்த கேரள அரசுப் பேருந்து, சசியின் வாகனத்தின் பின்னால் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சசி பலத்த காயமடைந்தாா்.
அவ்வழியாகச் சென்றவா்கள், அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சசி உயிரிழந்தாா்.
இது குறித்து, தக்கலை போலீஸாா் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் பிரவின்குமாா் (29) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.