கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா மகன் மணிகண்டன்(26). இவா் தனது நண்பரின் கைப்பேசி காணாமல் போனது குறித்து அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் ஜெய்ஹிந்திடம் விசாரித்துள்ளாா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ஜெய்ஹிந்த் மணிகண்டனைத் தாக்கினாராம்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெய்ஹிந்தை கைது செய்தனா்.