தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது
கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55). இவரது மகன் பிரைசன் (33).
கேரளத்தில் பணிபுரிந்து வரும் பிரைசன் கருத்தப்பிள்ளையூருக்கு சிலநாள்களுக்கு முன் வந்திருந்த நிலையில், தனது தாய் ஜான்சியிடம், மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தாராம்.
இதுகுறித்து ஜான்சி, ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரைசனை கைது செய்தனா்.
பிரைசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை கொலைசெய்தது குறிப்பிடத்தக்கது.