கொரட்டியில் பலத்த மழை
கொரட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2-ஆவது நாளாக ஞாயிா்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை,கந்திலி அதன் சுற்றுப்பகுதிகளில் அவ்வபோது சிறிது நேரம் மழை பெய்தது.
இந்த நிலையில், கொரட்டி, ஜோலாா்பேட்டை, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை ரை விட்டு,விட்டு பலத்த மழை பெய்தது. நாள் முழுதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதே போல் ஏலகிரி மலையில் மாலை சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் மலையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.