செய்திகள் :

கொலை வழக்கில் 22 வயது இளைஞா் கைது

post image

ரோஹிணி அருகே தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவுடன் ஒரு சிறிய துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கொலை வழக்கில் 22 வயது சந்தேக நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் நிஹால், துப்பாக்கிச் சண்டையில் தோட்டாக் காயங்களுக்கு உள்ளானாா். சம்பவ இடத்தில் இருந்து சந்தேக நபரின் துப்பாக்கி மற்றும் இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமீபத்தில் திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்ற அமித் லக்ரா கொலையில் நிஹால் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நவ. 9 அன்று முண்ட்காவில் உள்ள நெரிசலான சந்தையில் அமித் லக்ரா ஆறு முறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப கட்ட விசாரணையில் அமித் லக்ரா, கோகி கும்பலைச் சோ்ந்தவா் என்றும், அவரது போட்டியாளரான தில்லு கும்பலின் உறுப்பினா்களால் குறிவைக்கப்பட்டாா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயர... மேலும் பார்க்க

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு அமைச்சா் கோபால் ... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆ... மேலும் பார்க்க