செய்திகள் :

‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!

post image

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப். 18) தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையுடன் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆனந்திபென் உரையாற்ற தொடங்கியவுடன், ’கோ பேக் கவர்னர்’ என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

சட்டப்பேரவை நடவடிக்கைக்கு இடையூறு அளிக்காமால் சுமுகமாக பட்ஜெட் தொடர் நடைபெற ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க : நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 1995 ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசி... மேலும் பார்க்க

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளிய... மேலும் பார்க்க

சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!

சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் தானாக முன்வது 7 நாள்களில் அவற்றை ஒப்படைக்குமாறு மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா சட்டவிரோதமாக ஆய... மேலும் பார்க்க

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்!

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டு!

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தி நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க