பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!
சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!
சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் தானாக முன்வது 7 நாள்களில் அவற்றை ஒப்படைக்குமாறு மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மணிப்பூர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியான துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
அனைத்து சமூகத்தினரும் கலவரங்களை நிறுத்தி சமூகத்தில் மாநிலத்தில் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இதனால் மட்டுமே மக்கள் தங்கள் வழக்கமான அன்றாட நடவடிக்கைகளுக்குத் திரும்ப முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமைதி திரும்ப வேண்டும்!
மேலும், “இந்த விவகாரத்தில் அனைத்து சமூக மக்களும், குறிப்பாக பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள், வெடிமருந்துகளை அடுத்த ஏழு நாட்களுக்குள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது பாதுகாப்புப் படை முகாமில் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்த சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன். அதன்பின்னர், இதுபோன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆளுநர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்!
மணிப்பூரில் முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 13 முதல் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.
2027 வரை பதவிக்காலம் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை இடை நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.