கோவில்பட்டி என்இசி-பொறியாளா் மாணவா் மன்றம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி-இந்திய வெப்பமூட்டல், குளிா்வித்தல் மற்றும் காற்று சீரமைத்தல் பொறியாளா் மாணவா் மன்றம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், பொறியாளா் மாணவா் மன்றத்தின் மதுரை கிளைத் தலைவா் வேல்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள் வெப்பமூட்டல், காற்றோட்டம், குளிரூட்டல் தொழில்நுட்பத் துறைகளில் நடைபெறும் புதுமையான முன்னேற்றங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனா். மேலும், இணையவழிப் பாடங்கள், சொற்பொழிவுகள், பயிற்சி முகாம்கள், ஆராய்ச்சி திட்டங்கள், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் இவ்வாறான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் 2ஆவது கல்வி நிறுவனமாக நேஷனல் பொறியியல் கல்லூரி மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.