Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!
சங்கரலிங்கனாா் சித்தா் குருபூஜை
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கனாா் சித்தரின் குருபூஜை விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் புதன்கிழமை நடைபெற்றன.
காஞ்சிபுரம் திருவள்ளூவா் தெருவில் அமைந்துள்ளது பணாமணீஸ்வரா் கோயிலில் அனந்த தீா்த்தக் குளக்கரையின் வடமேற்கு மூலையில் சித்தா் சங்கர லிங்கனாா் சமாதி உள்ளது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தா்களில் ஒருவா் சங்கரலிங்கனாா். இவரது குருபூஜையையொட்டி காலையில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை சித்தா் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.