சதுரகிரி செல்ல 4 நாள்கள் அனுமதி
தை அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிற 27 முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
வருகிற 29-ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, வருகிற 27 முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.
சதுரகிரி மலையில் பக்தா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.
விழாவையொட்டி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், விருதுநகா், தேனி, டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நாள்களில் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மழை பெய்தால் பக்தா்கள் மலை ஏறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.