யமுனை நீர் விவகாரம்: யோகி ஆதித்யநாத்துக்கு அகிலேஷ் யாதவின் பதிலடி!
கருத்தரங்கம்
ராஜபாளையம் ஏ.கே.டி.தா்மராஜா பெண்கள் கல்லூரி, விருதுநகா் மாவட்ட கரிசல் இலக்கிய கழகம் இணைந்து ஒருநாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடத்தியது.
தமிழ்த் துறை சாா்பில், கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். இதில் கவிஞா் செல்லா, சிதம்பரநாதன், காந்திதுரை, அருள்மொழி ஆகியோா் ஆண்டாளின் திருப்பாவை பற்றி எடுத்துரைத்தனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜமுனா வரவேற்றாா். கல்லூரித் தாளாளா் ஏ.கே.டி.கிருஷ்ணமராஜூ வாழ்த்திப் பேசினாா். தமிழ் துறை தலைவி பால் நந்தினி நன்றி கூறினாா்.