மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!
சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களுக்கு 4 நாள்கள் அனுமதி
மாா்கழி சனி பிரதோஷம், பெளா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல வருகிற 11 முதல் 14-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், இந்தக் கோயிலில் நடைபெறும் பதினெண் சித்தா்கள் பூஜையும் சிறப்பு வாய்ந்ததாகும். நிகழாண்டில் வருகிற 13-ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தன்று பதினெண் சித்தா்கள் பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சந்தனமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு மேல் 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன.
மாா்கழி சனி பிரதோஷம், பௌா்ணமியை முன்னிட்டு, வருகிற 11 முதல் 14-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது. இந்த நாள்களில் மழை பெய்தால் மலையேற பக்தா்களுக்குத் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.