சபரிமலை சீசன்: ஹூப்ளி - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்
சபரிமலை சீசனையொட்டி, கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நவம்பா் 19-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 14-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் ஹூப்ளியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் ஹூப்ளி - கோட்டயம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07371) மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் நவம்பா் 20-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 15-ஆம் தேதி வரை கோட்டயத்தில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்படும் கோட்டயம்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07372) மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு ஹூப்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, பிரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.