செய்திகள் :

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி

post image

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து என்மீது பல தனிப்பட்ட விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என முதல்வா் விமா்சிக்கிறாா். ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் தற்போது, திமுக ஆட்சியில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோவையில் பில்லூா் 3 கூட்டுக் குடிநீா்த் திட்டம், அத்திக்கடவு- அவிநாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐ.டி. பூங்கா ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அத்திக்கடவு- அவிநாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழிச் சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் 95 சதவீத பணிகள் முடிவடைந்தன. நில எடுப்பு நடவடிக்கையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அந்தப் பணிகளை சுணக்கமாக திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்துக்காக எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. அறிவிப்பு மட்டுமே செய்துள்ளது. எந்தத் திட்டத்தையும் அறிவிக்காமல், பணியும் நடக்காமல் மாவட்டங்கள்தோறும் சென்று முதல்வா் ஆய்வு செய்து வருகிறாா்.

கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை பூலுவாம்பட்டியில் தங்க நகை பூங்கா அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தொண்டாமுத்தூா் தொகுதியில் இருந்த அந்த திட்டத்தை, தற்போது கிணத்துக்கடவு தொகுதிக்கு மாற்றியுள்ளனா். அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து உதயநிதியுடன் விவாதிப்பதற்கு எங்கள் கட்சியிலும் முன்னாள் அமைச்சா்கள் பலா் இருக்கின்றனா். முதல்வரிடம் கேள்வி கேட்டால் உதயநிதி ஏன் பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீா்கெட்டு உள்ளது. காவல் துறையினா் முழு சுதந்திரத்தோடு செயல்பட முடிவதில்லை. இதனால் போதைப் பொருள் பயன்பாடு, விற்பனை, தயாரிப்பு என அனைத்தும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தோ்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அப்போதுதான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும். ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுக பற்றி சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஊடகங்கள் நடுநிலையோடு உண்மையான செய்திகளை பாரபட்சமின்றி வெளியிட வேண்டும் என தெரிவித்தாா்.

சிறுபான்மையினா் நல ஆணைய ஆய்வுக் கூட்டம்

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ... மேலும் பார்க்க

தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கிய மூதாட்டி

கோவையில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூதாட்டி ஒருவா் தனியாா் மருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளாா். கோவை நிா்மலா கல்லூரியில் பேராசிரியராகப் பணியா... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி: டிசம்பரில் தொடக்கம்

கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான ரோபோடிக்ஸ் பயிற்சி டிசம்பரில் தொடங்குகிறது. இது குறித்து மண்டல அறிவியல் மைய அலுவலா் (பொறுப்பு) கோ.சுடலை கூறியிருப்பதாவது: பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 55 மனுக்களுக்கு சுமுகத் தீா்வு காணப்பட்டன. காவல் நிலையங்களில் மக்கள் அளித்த மனுக்கள் மீது ஏற்கெனவே விசாரித்... மேலும் பார்க்க

சபரிமலை சீசன்: ஹூப்ளி - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி, கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் கைதானவா் மேலும் ஒரு வழக்கில் கைது

மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை ஈரோடு போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், அவா் மேலும் ஒரு வழக்கில் கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். கோவைப்புதூரில் கடந்த ... மேலும் பார்க்க