உலகத்திலேயே ரிஷப் பந்த் ஒரு சிறந்த டிஃபென்டர்! அஸ்வின் புகழாரம்!
சமத்துவ பொங்கல் விழா: திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்
தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை, சமத்துவ பொங்கல் விழாவாகக் கொண்டாடுமாறு, கட்சியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக அமைச்சருமான பெ.கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48, காலை உணவுத் திட்டம், கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதிக வேலைவாய்ப்பு வழங்குவதிலும், அதிக தொழிற்சாலைகளை உருவாக்கியதிலும் தமிழகம் முதல் மாநிலமாக இருக்கிறது.
தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சமத்துவ பொங்கல் வைத்து, கட்சிக் கொடியேற்றி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.