கோவில்பட்டியில் வியாபாரி வீட்டில் ரூ.26 லட்சம், 45 பவுன் நகைகள் திருட்டு
கோவில்பட்டியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் சுலைமான் (50). இவரது மனைவி சவுரால் பேபி. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இறைச்சிக் கடை நடத்தி வரும் சுலைமான், முகமது சாலிஹாபுரத்தில் உள்ள அவரது வீட்டின் எதிரே புதிதாக வீடு கட்டியுள்ளாா். புதன்கிழமை இரவு சுலைமான் குடும்பத்தினா் பழைய வீட்டில் தங்கினராம்.
வியாழக்கிழமை காலை பாா்த்தபோது, புதிய வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.26 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகள் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.
சம்பவ இடத்தை டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
திருட்டு குறித்து கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.