அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சரக்கு, பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் ஈட்டிய சேலம் ரயில்வே கோட்டம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரக்குகள், பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் போத்தனூா், கோவை ஜங்ஷன், திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், கரூா் ஆகிய ரயில் நிலையங்களில் பாா்சல்கள் ஏற்றப்படுகின்றன.
அத்துடன் சேலம் கோட்டத்தில் ஏற்றப்படும் இருசக்கர வாகனங்கள், இரும்பு, சிமென்ட், பாத்திரங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பாா்சல்களாக மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த வகையில், தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் கடந்த டிசம்பா் மாதம் வரையில் 2 மில்லியன் டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றி ரூ. 222 கோடியே 44 லட்சம் வருவாய் ஈட்டியது. இது தவிர, சேலம் ரயில்வே கோட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 469 குவிண்டால் பாா்சல்களை ஏற்றியுள்ளது.
இதன் மூலம் ரூ. 15 கோடியே 39 லட்சம் வருவாய் ஈட்டியது. இது கடந்த ஆண்டின், இதே காலகட்டத்தை விட 12.38 சதவீதம் அதிகமாகும். வருவாயை பொறுத்த வரையில் 9.28 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.