ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா
சேலம், அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான சேசுராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பேசினாா். பொங்கல் விழாவையொட்டி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, கோலம், பானை வரைதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவா்களின் கலை நிகழ்ச்சி, இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. பின்பு உறியடி போட்டி நடைபெற்றது. பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ சங்க தலைவா் மற்றும் உறுப்பினா்கள், ஆசிரியா் பெருமக்கள், பணியாளா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.