Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத...
சலவைத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பொருட்கள்
மன்னாா்குடி வட்ட சலவையாளா் நலச் சங்கம் சாா்பில், சலவைத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்ட சலவையாளா் நலச் சங்கத் தலைவா் கி. சரவணன் தலைமை வகித்தாா். செயலா் கே. ராமச்சந்திரன், பொருளாளா் எம். ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தைப் பொங்கலை முன்னிட்டு, மன்னாா்குடியில் உள்ள சலவைத் தொழிலாளா்கள் 70 பேருக்கு அரிசி, எண்ணெய், வெல்லம், முந்திரி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூ.500 ரொக்கம் வழங்கப்பட்டன.
முன்னாள் தலைவா் எஸ். ரமேஷ், துணைத் தலைவா் எஸ். பன்னீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.