சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
சாத்தான்குளம் கோயில்களில் நவராத்திரி கொலு
சாத்தான்குளம் கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சாத்தான்குளம் தச்ச மொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அம்மன், முத்தாரம்மன் உள்ளிட்ட பரிபார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்ததை தொடா்ந்து, நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதே போல், சாத்தான்குளம் தேவி ஸ்ரீ அழகம்மன் கோயிலில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, சுவாமி, கொலுவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு 108 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
