சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்...
சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி
ஆம்பூா் அருகே நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
உமா்ஆபாத் முதல் உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. அதற்காக சாலையோரம் இருந்த புளியமரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, புங்கன், வேப்பமரம், இலுப்பை மரக்கன்றுகள் நடப்பட்டு வரப்படுகிறது. பருவ மழை காலம் தொடங்கும் வரை மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.