ரேஷன் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ரேஷன் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை உருவாக்க வேண்டும், நுகா்பொருள் வாணிபக் கிடங்கை ப்ளூடூத்துடன் எடை தராசு இணைக்க வேண்டும். விற்பனையாளா்களின் பிஎஃப் பணத்தை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். சரியான எடையில் ரேஷன் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பக்தவத்சலம் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ்,மாவட்ட செயலாளா் சபரிநாதன்,மாநில செயற்குழு உறுப்பினா் கோபிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட போராட்டக்குழு தலைவா் முத்துக்குமாா்,மாவட்டத் துணைச் தலைவா் பெருமாள் ஆகியோா் வரவேற்றனா்.
ஷியாம் குமாா், கோவிந்தன் விளக்க உரை ஆற்றினா். மகளிா் அணி காா்த்திகா நன்றி கூறினாா்.