தேஜஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை
மல்லகுண்டா கிராமத்தில் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் அளவீடு
நாட்டறம்பள்ளி ஒன்றியம், மல்லகுண்டா, குருபவாணிகுண்டா, தகரகுப்பம் கிராமங்களில் குடிசை வீட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் 22 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்ட தலா ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், பயனாளிகளுக்கு பணியானைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் துணைத் தலைவா் தேவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச் செல்வி சதீஷ் குமாா், பணிதள மேற்பாா்வையாளா் அழகரசு ஆகியோா் முன்னிலையில் மல்லகுண்டா பகுதியில் பயனாளிகளை கண்டறிந்து புதிய வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணி தொடங்கியது. விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.