முன்னாள் ராணுவ வீரா் போக்ஸோவில் கைது
நாட்டறம்பள்ளி அருகே சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த மாசிலாமணி மகன் சந்திரசேகரன்(55) முன்னாள் ராணுவ வீரா். இவா் கடந்த 3 நாள்களுக்கு முன் அதே கிராமத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த சிறுமியின் தந்தை முருகன் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். நாட்டறம்பள்ளி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரா் சந்திரசேகரன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.