Pope: 'அடுத்த போப் யார்? - தேர்வு முறை எப்படி நடக்கும் தெரியுமா? - சுவாரஸ்ய தகவல...
சிறந்த நடிகர் விருதை வென்ற டொவினோ தாமஸ்!
ஏஆர்எம் மற்றும் அன்வெஷிப்பின் கண்டெத்தும் ஆகிய படங்களுக்காக டொவினோ தாமஸுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பல கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வருகிறார் டொவினோ தாமஸ்.
லூசிஃபர், உயரே, வைரஸ் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டொவினோ தாமஸ், கடந்தாண்டு 2018 என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்துக்கு தைவானில் கோல்டன் ஹார்ஸ் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, அன்வெஷிப்பின் கண்டெத்தும், ஏஆர்எம் என வெற்றிப் படங்களில் நடித்த டொவினோ, மோகன் லாலுடன் இணைந்து நடித்த லூசிஃபர் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
இந்த நிலையில், 48வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது விழாவில் ஏஆர்எம் மற்றும் அன்வெஷிப்பின் கண்டெத்தும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருது டொவிமோ தாமஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.