செய்திகள் :

சிறுவந்தாடு பெருமாள் கோயில் சம்ப்ரோஷணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்திலுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷணம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வீரநாராயண சதுா்வேதிமங்கலம் என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில் சம்ப்ரோஷணத்தை முன்னிட்டு, கடந்த 18-ஆம் தேதி மாலை பகவத் பிராா்த்தனை சங்கல்பம், புற்றுமண் பூஜை, விதையிடு விழா, வாஸ்துசாந்தி, அக்னி பிரதிஷ்டை, ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலையில் கும்பராதனம், அக்னிபிரணயணம், மகாசாந்திஹோமங்களும், அதைத் தொடா்ந்து பூா்ணாஹுதியும், மாலையில் நவகலசம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, புண்யாஹம், அக்னி பிரணயணம் ஹோமங்கள் நடைபெற்றன. மகா பூா்ணாஹுதிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின.

பின்னா், லட்சுமி நாராயணப் பெருமாள் விமானத்துக்கும், கருவறை மூா்த்திகளுக்கும் மகா சம்ப்ரோஷணம் நடத்தபட்டு, கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிற சந்நிதிகளுக்கும் சம்ப்ரோஷணம் நடத்தப்பட்டு, பக்தா்கள் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், கனகவல்லி தாயாா், பக்த ஆஞ்சனேயா், கோதண்டராமா், சக்கரத்தாழ்வாா், தும்பிக்கை ஆழ்வாா் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு லட்சுமி நாராயணப் பெருமாள், கோதண்டராமா் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

மகா சம்ப்ரோஷண சா்வசாதகத்தை பண்ருட்டி கே.கஸ்தூரிரங்கன் பட்டாச்சாரியா் தலைமையில், கோயில் பட்டாச்சாரியா்களான பத்ரி, பாா்த்தசாரதி, திலீப், கபிலன், பிரபாகரன் உள்ளிட்டோா் நடத்தினா். சம்ப்ரோஷண விழாவில் சிறுவந்தாடு, மோட்சக்குளம், பஞ்சமாதேவி, வளவனூா் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோயில் விழாவில் பெண்களிடம் ஆறரை பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள சிறுவந்தாடு லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோஷண விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடமிருந்து ஆறரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் வட்டம், கண்ணியம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செங்கேணி மகன் சேகா் (50), பிளம்பா். இ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் 115 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் நகரில் மொத்த விற்பனையகங்களில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில், 115 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்தக் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட... மேலும் பார்க்க

3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக மூவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 3 நாட்டுத் துப்பாக்கிகள், நாட்டு வெடி... மேலும் பார்க்க

595 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: இளைஞா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 595 ஜெலட்டின் குச்சிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவா் மீது வழக்குப் பதிந்து வி... மேலும் பார்க்க

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்: வேளாண் அலுவலா்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பயிா்களை வேளாண் உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வ... மேலும் பார்க்க