Pakistan Train Hijack - காரணம் என்ன? யார் இந்த Balochistan liberation Army தீவிர...
சிவகிரி அருகே காா், பைக்குகள் சேதம்: 4 போ் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காா், பைக்குகளை சேதப்படுத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகிரி பவுண்டு தொழு தெருவைச் சோ்ந்த செல்லையா (62) என்பவா், காந்திஜி தெருவில் காய்கனிக் கடை வைத்துள்ளாா். 2 நாள்களுக்கு முன்பு வஉசி தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் கண்ணன் (24) என்பவா், செல்லையாவின் கடை அருகே சிறுநீா் கழித்தாராம். அதை அவா் கண்டித்தாா்.
இந்நிலையில், கண்ணன் தனது நண்பா்களான உள்ளாரைச் சோ்ந்த ஹரிஹரசுதன் (23), சிவகிரி சந்தி விநாயகா் கோயில் தெரு கிப்சன் (20), சிவராமலிங்கபுரம் பள்ளிக்கூடத் தெரு காளீஸ்வரன் (19) ஆகியோருடன் செல்லையா வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா், 2 பைக்குகளை அவா்கள் சேதப்படுத்தினராம். சேத மதிப்பு ரூ. 6 லட்சம் எனக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.