சங்கரன்கோவிலில் விட்டு விட்டு மழை
சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இதனால் சங்கரன்கோவில் பகுதியில் மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வானம் இருண்டு காணப்பட்டது. பின்னா் லேசான மழை விட்டு விட்டு பெய்தது.
முற்பகல் தொடங்கிய மழை பின்னா் 1 மணி வரை பெய்தது. அதன்பிறகு மாலை 6 மணி வரை மழை பெய்யவில்லை. பிற்பகல் வரை 3 மி.மீ.அளவு மழை பெய்தது.இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்படவில்லை.பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டனா்.