செய்திகள் :

சுந்தா் நாக்ரியில் 131 அறைகளுடன் புதிய பள்ளி: முதல்வா் அதிஷி திறந்துவைத்தாா்

post image

வடகிழக்கு தில்லியின் சுந்தா் நாக்ரியில் 131 அறைகள் கொண்ட புதிய பள்ளியை தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், இது வகுப்பறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க உதவும் என்று முதல்வா் அதிஷி கூறினாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் அதிஷி பேசியதாவது: 2015-இல் அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வராகப் பதவியேற்றபோது, ​ ஒரே வகுப்பறையில் சுமாா் 150 மாணவா்கள் அடைக்கப்பட்டனா். இந்தப் புதிய பள்ளி திறக்கப்பட்டதன் மூலம், இப்பகுதியில் வகுப்பறைகள் மீதான அழுத்தம் கணிசமாகக் குறைக்கப்படும். மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பள்ளி, தரமான வகுப்புகள் மற்றும் சிறந்த கல்வி கிடைக்கும்.

சுந்தா் நாக்ரி, நந்த் நாக்ரி, மண்டோலி மற்றும் ஹா்ஷ் விஹாா் போன்ற பகுதிகளில் இருந்து சுமாா் 7,000 மாணவா்கள் இரண்டு ஷிஃப்டுகளில் இந்தப் பள்ளியில் படிப்பாா்கள். பள்ளி கட்டடத்தில் ஏழு ஆய்வகங்கள், ஒரு பணியாளா் அறை, ஒரு மாநாட்டு அறை, ஒரு பல்நோக்கு அரங்கம் மற்றும் ஒரு விரிவுரை அரங்கம் ஆகியவை உள்ளன. தனியாா் பள்ளிகள் கூட அத்தகைய வசதிகளை வழங்குவதில்லை.

இந்தப் பள்ளி திறக்கப்பட்டதற்கு கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வடகிழக்கு தில்லி மிகவும் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியாகும். மேலும், இந்த சிறந்தப் பள்ளியை உருவாக்க கேஜரிவால் இங்குள்ள நில மாஃபியாவை அகற்றினாா் என்றாா் முதல்வா் அதிஷி.

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயர... மேலும் பார்க்க

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு அமைச்சா் கோபால் ... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆ... மேலும் பார்க்க