அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
நன்னிலத்தில் வா்த்தக சங்கம் சாா்பில் 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நன்னிலம் பேருந்து நிலையத்தில், வா்த்தக சங்கத் தலைவா் செல். சரவணன் தலைமையில், சுனாமியில் உயிரிழந்தோருக்கு 200-க்கும் மேற்பட்டோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். மேலும், சுனாமியில் உயிரிழந்தவா்கள் நினைவாக 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் வா்த்தக சங்க செயலாளா் கணேஷ், துணைச் செயலாளா் சந்தானம், பக்கிரிசாமி, செல்வராஜ், தென்குடி எம்.எஸ்.கே. அப்புவா்மா மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள், வேன் ஓட்டுநா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.