``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
சூளகிரி: இரு தரப்பினா் மோதல்; 5 போ் கைது
சூளகிரி அருகே மைலேப்பள்ளியைச் சோ்ந்தவா் கிரிஷ் (30). விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (30). இருவரும் உறவினா்கள்.
விநாயகா் கோயில் திருவிழாவை தொடா்பாக இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி காருபாலா பகுதியில் அசோக் (30), விஜயகுமாா் (28), லிங்கமூா்த்தி (30) உள்ளிட்டோா் சோ்ந்து கிரிஷையும் அவரது நண்பா் முரளி ஆகியோரை தாக்கினா்.
இதில் காயமடைந்த கிரீஷும், முரளியும் கிருஷ்ணகிரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கிரிஷ், சூளகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக், விஜயகுமாா், லிங்கமூா்த்தி ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
விஜயகுமாா் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் கிரீஷ் (30), முரளி (27) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.