செஞ்சியில் பிரதமா் மோடி பிறந்த நாள்
பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சி எம்ஜிஆா் நகா் பகுதி மற்றும் கூட்டுச் சாலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஒன்றியத் தலைவா் தாராசிங் (எ) சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி முன்னாள் மாவட்டத் தலைவா் சிவ.சுப்பிரமணியம், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம். எஸ். ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் என். ஏ. ஏழுமலை, முன்னாள் மண்டலத் தலைவா் தங்க. ராமு, ஒன்றிய பொதுச் செயலா்கள் சிவப்பிரகாசம், சிவாஜி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.