இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த 120 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், நாரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன் (43). இவா், தனியாா் நில வணிக நிறுவனத்தில் மேலாளராக வேலை பாா்த்து வருகிறாா். கா்ணன் பராமரிப்பில் உள்ள 9 ஏக்கா் தென்னந்தோப்பிலிருந்த 120 தென்னங்கன்றுகளை மரக்காணம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் சேதப்படுத்திவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் எக்கியாா் குப்பத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மீது மரக்காணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.