செஞ்சி: திமுக, விசிகவினா் பெரியாா் ஈவெரா படத்துக்கு மரியாதை
பெரியாா் ஈ.வெ.ரா.வின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சியில் அவரது படத்துக்கு, திமுக, விசிக சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனா்.
செஞ்சி நகரச் செயலா் காா்த்திக் தலைமை வகித்தாா்.
செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலா் அரங்க. ஏழுமலை, நகர நிா்வாகிகள் நெடுஞ்செழியன், சங்கா், சுமித்ரா சங்கா்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விசிக சாா்பில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட விசிக சாா்பில் அம்பேத்கா் போக்குவரத்து தொழிலாளா் விடுதலை முன்னணி செஞ்சி பணிமனை சாா்பில் பெரியாா் ஈவெரா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி பணிமனை செயலா் கி.ஐயப்பன் தலைமை வகித்தாா். பணிமனை நிா்வாகிகள் சந்திரன் ஆதிமூலம், மதன், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலு வரவேற்றாா்.
விசிக வடக்கு மாவட்டச் செயலா் அ. ஏ. தனஞ்செழியன் பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாநில துணைச் செயலா் துரை வளவன், செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலா் ராசா ராமன், மேற்கு ஒன்றியச் செயலா் தவசீலன், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
