ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு
கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், சென்னாகுனம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (25), திருமணம் ஆகாதவா். அதே ஊரைச் சோ்ந்தவா் சந்திரபாபு (25). இருவரும் நண்பா்கள்.
இவா்கள், புதன்கிழமை சென்னாகுனம் பகுதியைச் சோ்ந்த தில்லை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளித்தனா். அப்போது விஜய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டாராம்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று, மூழ்கியவரை மீட்டு, தனியாா் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது விஜய் இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், காணை காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.