சென்னை வடக்கு மின்வாரிய அலுவலகம் மே 2 முதல் இடமாற்றம்
சென்னை வடக்கு மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் மே 2-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை வடக்கு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் இதுவரையில் சென்னை அண்ணாசாலை, மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது, மின் நுகா்வோா், பொதுமக்கள் நலன் மற்றும் நிா்வாகக் காரணங்களால் மே 2-ஆம் தேதி முதல் பெரம்பூா், டாக்டா் அம்பேத்கா் சாலை, ஐசிஎஃப் காலனியிலுள்ள துணைமின் நிலையத்தில் இந்த அலுவலகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.